நீலகிரி மாவட்டம் உதகையில் படுகர் இனத்தை சேர்ந்த 350 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றாக இணைந்து கார்த்திகை தீப திருவிழாவை உற்சாகமாக கொண்டாடினர். நஞ்சநாடு கிராமத்தில் 100 அடி உயர கம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாரம்பரிய நடனமாடி உற்சாகம் அடைந்தனர்.