மதுரை மாவட்டம் வெளிச்சநத்தத்தில் விசிக சார்பில் 45 அடி உயரத்தில் கொடிமரம் நட்டதை தடுக்க தவறியதாக வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வெளிச்சநத்தம் கிராமத்தில் ஏற்கனவே 25 அடி உயரத்தில் விசிக கொடி மரம் இருந்த நிலையில், அதனை 45 அடி உயரமாக மாற்றியதாக கூறப்படுகிறது. இதற்கு வருவாய் துறையினர் மற்றும் போலீசார் அனுமதி மறுத்ததால் கடந்த 7 ஆம் தேதி விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கொடிமரம் நடுவதற்கு வருவாய் அலுவலர்கள் அனுமதி அளித்தனர். இந்நிலையில், முறையாக செயல்பட்டு கொடிமரம் நடுவதை தடுக்க தவறியதாக கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம், உதவியாளர் பழணியாண்டி, சத்திரப்பட்டி வருவாய் ஆய்வாளர் அனிதா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார்