உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் நடைபெற்று வரும் கந்தூரி விழா சந்தன கூடு ஊர்வலத்திற்கான சந்தனம் அரைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளை சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறவுள்ள நிலையில், பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.