விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே உள்ள பூரிகுடிசை பகுதியின் 4ம் ஆண்டு பனைத் திருவிழா மாவொளி சுற்றும் நிகழ்வோடு நிறைவடைந்தது. தமிழ்நாடு பனையேரிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் பனை மரத்துடன் தொடர்புடைய பாரம்பரியப் பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டது. மேலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், விழாவின் இறுதி நிகழ்வில் திரளானோர் பங்கேற்று பனை பொருள் மூலம் செய்யப்பட்ட மாவொளியை சுற்றி மகிழ்ந்தனர்.