சட்டமன்ற தேர்தலில் போட்யிடுவதற்காக விருப்ப மனு அளித்ததன் மூலம், அதிமுகவில் இதுவரை 3 கோடி ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 4ஆவது நாளாக விருப்ப மனு விநியோகம் விறுவிறுப்பாக நடைபெற்றது. தமிழகத்தில் பொது மற்றும் தனி தொகுதிகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் செலுத்தி முதல் நாளில் ஆயிரத்து 237 விருப்ப மனுக்கள் பெறப்பட்ட நிலையில், கடந்த மூன்று நாட்களில் 2 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.