மதுரை அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த 4 வயது மகனை கழுத்தை நெறித்து கொலை செய்த தாய்க்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. குச்சம்பட்டியை சேர்ந்த கொத்தனார் ராம்குமாரின் மனைவி ஆனந்தஜோதிக்கும், மருதுபாண்டி என்கிற இளைஞருக்கும் தகாத உறவு இருந்து வந்த நிலையில், இருவரும் சேர்ந்து இருப்பதை மகன் ஜீவா பார்த்து விட்டதால் கொலை செய்தார்.