கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே சேப்பளாநத்தம் உயர்நிலைப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 5 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாணவிகள் மயக்கம் அடைந்தது பற்றி தங்களுக்கு தெரிவிக்காமல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்ததால், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.