தொடர் கனமழை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே அறுவடைக்கு தயாராக இருந்த 50-க்கும் மேற்பட்ட ஏக்கரிலான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மேலேரி, சிங்கிலிபாடி, எடையார்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் நெற்பயிர்கள் மூழ்கியதால், அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.