நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கோவிலில் கிடா வெட்டி 2 ஆயிரத்து 500 கிலோ கறியில் 5 ஆயிரம் பேருக்கு சமபந்தி விருந்து பரிமாறப்பட்டது. புதுப்பட்டி அருகேயுள்ள போதமலையில் ஆண்கள் மட்டுமே வழிபடும் மலைவாழ் மக்களுக்கான கள்ளவழி கருப்பனார் கோவிலில், 28 ஆடுகள், 29 சேவல்கள் மற்றும் 28 பன்றிகள் பலியிடப்பட்டு சமபந்தி விருந்து நடைபெற்றது.