பொன்னேரி அருகே திருமணமான 5 மாதங்களில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.மர்ம முறையில் மரணம் : அத்திவாக்கம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் கௌசல்யா (20). இவர் சென்னையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி கணிதம் முடித்து, பொன்னேரி தனியார் கல்வியியல் கல்லூரியில் பி.எட். இரண்டாமாண்டு பயின்று வருகிறார். கடந்த 5 மாதங்களுக்கு முன் பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தை சேர்ந்த தூரத்து உறவினரான அத்தை மகன் கொத்தனார் வேலை செய்து வரும் ராஜேஷ் (30) என்பவருடன் கௌசல்யாவிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகும் கௌசல்யா படிப்பை தொடர்ந்து வந்துள்ளார். நேற்று கொத்தனார் வேலைக்கு சென்ற போது தனது மனைவி கௌசல்யா தவறி கீழே விழுந்து தலையில் காயமடைந்ததாகவும், பின்னர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் அங்கு கௌசல்யா உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதாகவும். ராஜேஷ் கௌசல்யாவின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.காவல் நிலையத்தில் புகார் : அங்கு வந்த பெண்ணின் தந்தை பார்த்த போது உயிரிழந்த கௌசல்யாவின் தலை, முகத்தில் காயம் இருந்ததால் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் கௌசல்யாவின் கணவர் ராஜேஷை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முடிவுரை : திருமணமான 5 மாதங்களிலேயே இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Related Link கராத்தே போட்டியில் சாதனை புரிந்த மாணவர்கள்