மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உட்பட 60 பேர் காயமடைந்தனர், இதில் 12 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி காலை 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. போட்டியை அமைச்சர் மூர்த்தி மாடுபிடி வீரர்களுடன் ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்ற பின்னர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, போட்டியில் பங்கேற்பதற்காக 600 வீரர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்திருந்த நிலையில் 573 பேர் பங்கேற்க வந்திருந்தனர். இதில் 12 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 561 பேர் போட்டியில் பங்கேற்றனர். மொத்தம் இறுதிச்சுற்றோடு சேர்த்து 12 சுற்றுகள் நடைபெற்றது. விறுவிறுப்பாக போட்டிகள் நடைபெற்ற நிலையில், மாடுபிடி வீரர்கள் 28 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 23 பேர், பார்வையாளர்கள் 9 பேர் என 60 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த .. 01.அஜய், (மாட்டின் உரிமையாளர்) மேலூர். 02.சூர்யா, (மாடுபிடி வீரர்) தத்தனேரி. 03.ஹரிவிக்னேஷ், (மாடுபிடி வீரர்) வத்திராயிருப்பு. 04.கோகுலசெல்வன் (மாடுபிடி வீரர்) தேனூர். 05.இருளப்பன், (மாடுபிடி வீரர்) பொதும்பு, மதுரை. 06.அப்துல் முத்தலிப்பு (பார்வையாளர்) மதுரை 07. ஜெயசூர்யா (மாடுபிடி வீரர்) உசிலம்பட்டி. 08. முத்துக்குமார் ( மாடுபிடி வீரர்) தத்தநேரி மதுரை. 09. வினோத்குமார் ( மாட்டின் உரிமையாளர்) மேலவாசல் மதுரை. 10. முனியன் (பார்வையாளர்) அவனியாபுரம் மதுரை 11. அய்யங்காளை (மாட்டின் உரிமையாளர்) திருமங்கலம் 12. அமரன் ( மாடுபிடி வீரர் ) கொந்தகை சிவகங்கை ஆகிய 12 பேர் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்..இதையும் படியுங்கள் : பாலமேட்டில் துள்ளி குதிக்க தயார் நிலையில் காளைகள்