வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டம் கமலாபுரம் அருகே அறுவடைக்கு தயாராக இருந்த 600 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.