சென்னை தலைமைச் செயலகத்தில், பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். புற்றுநோய் தடுப்பு, பராமரிப்பு திட்டத்தின் கீழ் மகளிருக்காக 40 கோடி ரூபாய் மதிப்பிலான 38 நடமாடும் ஊர்திகளை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் 196 உதவியாளர், 18 வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியிடங்களில் தேர்வானோருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். மேலும், பல்வேறு மாவட்டங்களில் 62 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமையவிருக்கும் 12 தோழி விடுதிகளுக்கும், அரசினர் கூர்நோக்கு இல்லங்களுக்கும் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இதேபோல் காஞ்சியில் உள்ள அண்ணா பட்டு விற்பனை வளாகம் 3 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு அவர் திறந்து வைத்தார். இதையும் பாருங்கள் - பெண்களுக்காக புதிய அதிநவீன பேருந்து - எல்லா வசதியும் இங்கே இருக்கு | Tamil Nadu mobile ambulances