தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 67ஆவது குருபூஜையையொட்டி, அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த வரும் பொதுமக்கள் பைக்கில் வரவேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியில் தென்மண்டல IG பிரேம் ஆனந்த் சின்கா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,தியாகி இமானுவேல் சேகரன் குரு பூஜையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளதாகவும், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என தெரிவித்தார்.