திருச்சி அருகே போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய 7 பேரை போலீஸார் கைது செய்தனர். துறையூரில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராக பணிபுரியும் அப்துல்லா, உப்பிலியபுரம் பேருந்து நிலையம் அருகே சக காவலர்களுடன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது மது போதையில் வந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு அபராதம் விதித்ததால் ஆத்திரமடைந்த அவர், நண்பர்களை வரவழைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.