நெல்லை மாவட்டம், பாப்பாக்குடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு, அரிவாள் வெட்டில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். பள்ளக்கால் பொதுக்குடி பகுதியை சேர்ந்த மைதீன் என்பவரது வீட்டின் கதவு மற்றும் ஜன்னலை அரிவாளால் வெட்டி, பெட்ரோல் குண்டை வீசிவிட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி மர்மநபர்கள் மசூது என்பவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியனர். இதில் படுகாயமடைந்த மசூது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம கும்பலை கைது செய்துள்ளனர். விசாரணையில் 2022 ம் பள்ளி மாணவன் செல்வ சூர்யா கொலையில் மைதீன் மகன் சித்திக் அலி சம்பந்தப்பட்டிருப்பதால் அவர் வீட்டின் மீது தாக்குதல் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.