மதுரை மாவட்டத்தில் ஆதிதிராவிடருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை அளவீடு செய்யும் பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கச்சைக்கட்டி கிராமத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் 55 பேருக்கும் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த 15 பேருக்கும் பட்டா வழங்கப்பட்டது. பட்டா பெற்றவர்களுக்கு இடத்தை பிரித்துக் கொடுக்க நிலத்தை சுத்தம் செய்யும் பணியில் வட்டாட்சியர் ராமச்சந்திரன் ஈடுபட்டு வந்த நிலையில், சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர்களுக்கு இடம் கொடுக்க கூடாது என கச்சைக்கட்டி கிராமத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.