தாய்லாந்து நாட்டில் இருந்து, விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 7கோடியே ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர் ரக கஞ்சா போதை பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னையை சேர்ந்த நபர், பாங்காக்கிற்கு சென்றுவிட்டு தாயகம் திரும்பிய அவர், அட்டை பெட்டியில் மறைத்து 7. 6 கிலோ எடையிலான உயர்ரக கஞ்சா பொருளை கடத்தி வந்ததை மோப்ப நாய் கண்டு பிடித்தது.