தாம்பரம் மாநகர காவல்துறையினரால் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 707 கிலோ கஞ்சா, தென்மேல்பக்கம் பகுதியில் உள்ள ஜிஜே மல்டி என்க்ளேவ் நிறுவனத்தில் வைத்து எரிக்கப்பட்டது. தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை, போலீசார் அவ்வப்போது எரித்து அழித்து வருகின்றனர். 2025 நவம்பர் மாதம் வரை மட்டும் தாம்பரம் மாநகர காவல்துறையினரால் மொத்தமாக 3,054 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டுள்ளது.