சென்னை அருகே 4 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 848 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த மத்திய போதைப் பொருள் கட்டுப்பாட்டு போலீஸார், 3 பேரை கைது செய்தனர். புறநகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ஈச்சர் கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், தினேஷ், சிவஞானம், பார்த்தசாரதி ஆகியோர் மிளகாய் மூட்டைகளுக்கு இடையே வைத்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.