விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கொழுந்தீஸ்வரர் கோவில் மலை அடிவாரத்தில் 8ஆம் நூற்றாண்டில் பயன்படுத்திய மண்பானை ஓடுகள், பல வகை தாது பொருட்கள் மற்றும் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. குளம் தோண்டியபோது பானை ஓடுகள் கிடைக்க பெற்ற நிலையில் அங்கு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.