ராணிப்பேட்டை அருகே 70 வயது மூதாட்டியின் காதுகளை அறுத்து நகைகளை கொள்ளை அடித்து சென்றவனை போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர். மலைமேடு பகுதியில் தனியாக வசிக்கும் மூதாட்டி சாலம்மாளின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் கத்தியால் அவர் காதுகளில் அணிந்து இருந்த தங்க நகைகளை அறுத்துக்கொண்டு அவரை தாக்கிவிட்டு சென்றான். இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார், அதே பகுதியை சேர்ந்த வினோத் குமார் என்பவனை பிடித்து விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டான்.