காவலர் பயிற்சி பள்ளியில் படித்தபோது முளைத்த காதல். காட்டுப்பகுதியில் பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடி. அடுத்தசில நிமிடத்தில் காதலியின் கழுத்தை நெரித்துக் கொன்ற காதலன். காதலியை கொலை செய்தது ஏன்? கொலைக்கான காரணம் என்ன? காதலன் சிக்கினானா?முகத்துல ஒருவித பதற்றத்தோட போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துருக்கார் ஒரு இளைஞர். தம்பி என்னாச்சுப்பானு காவலர்கள் கேட்டப்ப சார் என்னோட காதலியை கொலை பண்ணிட்டேன்னு சொல்லி அதிர வச்சிருக்காரு. அடுத்து முழுமையா விசாரிச்சப்பதான் அந்த இளைஞர் யாரு? கொலை செய்யப்பட்ட பொண்ணு யாரு? எதுக்காக கொலை நடந்துச்சுனு எல்லாத்துக்குமே விடை கிடைச்சது. விருதுநகர், ராஜபாளையம் பக்கத்துல உள்ள தளவாய்புரம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரோட 19 வயசு மகளான உமா, தென்காசி பாறைப்பட்டியில உள்ள ராம் என்ற பிரைவேட் காவலர் கோச்சிங் சென்டர்ல படிச்சிட்டு இருந்தாங்க. அதே கோச்சிங் சென்டர்லயே குளக்கட்டாறு பகுதியை சேர்ந்த மாரிராஜோட 25 வயசான மகன் ராஜேசும் படிச்சிருக்காரு. படிப்பு சம்மந்தமா நட்பா பேச ஆரம்பிச்ச ரெண்டுபேருக்கும் நாளடைவுல காதல் மலர்ந்துருக்குது. கோச்சிங் சென்டருக்கு போயிட்டு வீட்டுக்கு போறப்ப ரெண்டுபேரும் அடிக்கடி ஓட்டல்ல போய் சாப்பிடுறது, ஜூஸ் குடிக்கிறது, கோவிலுக்கு போறதுனு இருந்துருக்காங்க. அதேமாதிரிதான், வகுப்பு முடிஞ்சி பைக்ல ஒண்ணா போயிருக்காங்க காதல் ஜோடி.தூத்துக்குடி கழுகுமலை பக்கத்துல உள்ள கஸ்தூரிரெங்கபுரம் காட்டுப்பகுதிக்கு போயிருக்காங்க. ரெண்டுபேருமே வெவ்வேறு சமூகம்ங்குறதால கல்யாணத்துக்கு ஒத்துக்கமாட்டாங்க, அவங்களமீறி நான் வீட்டவிட்டு வரமாட்டேனு உமா சொன்னதா தெரியுது. அப்போ, லவ் பண்றதுக்கு முன்னாடியே நம்ம ரெண்டுபேரும் வெவ்வேறு சமூகம்னு நான் சொல்லிட்டேன், அந்தநேரம் சமூகமெல்லாம் ஒரு பிரச்சனையா? மனசுதான் முக்கியம்னு சொல்லிட்டு இப்ப வந்து சமூகத்த காரணம் காட்டுறதுல என்ன நியாயம் இருக்குதுனு ராஜேஷ் கேட்டதா சொல்லப்படுது. ரெண்டுபேரும் போலீஸ் வேலைக்கு போனபிறகு யாரு எதிர்த்தாலும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு ராஜேஷ் சொல்ல, என் பெற்றோரை மீறி நான் கல்யாணம் பண்ணிக்கமாட்டேனு உமா விடாப்பிடியா நின்னதா தெரியுது. அதனால, ரெண்டுபேருக்கும் வாக்குவாதம் முத்தினதா சொல்லப்படுது.காதலிக்கும்போது எதுவுமே சொல்லாம கடைசிநேரத்துல கதை சொல்றயானு ஆத்திரப்பட்ட ராஜேஷ், கோவத்துல உமாவோட கழுத்த நெரிச்சிருக்காரு. அதுல மூச்சுத்திணறி சம்பவ இடத்துலயே உயிரிழந்துட்டாங்க உமா. சும்மா மிரட்டுறதுக்காக கழுத்த நெரிச்ச ராஜேஷ் காதலி உயிரிழந்ததும் என்ன செய்றதுனு தெரியாம அழுதுருக்காரு. அதுக்குப்பிறகு, பக்கத்துல உள்ள வெம்பக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன்லபோய் சரணடைஞ்சிருக்காரு. நடந்த விஷயத்தையெல்லாம் கேட்ட அங்க இருந்த போலீசார் கொலை நடந்த இடம் கழுகுமலை லிமிட்ல வர்றதால அங்க உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டுப்போய் ஒப்படைச்சிருக்காங்க. அதுக்குப்பிறகு வழக்குப்பதிவு பண்ண கழுகுமலை போலீசார், ராஜேஷை அழைச்சிக்கிட்டு கஸ்தூரிரெங்கபுரம் காட்டுப்பகுதிக்குபோய் உமாவோட சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்காக அனுப்பி வச்சிருக்காங்க. ஒருநிமிஷம் வந்த கோபத்தால காதலியை கொலை செஞ்சிட்டு சிறைக்குப்போன காதலன் ராஜேஷோட காக்கிச்சட்டை கனவு மட்டும் கலையல. கூடவே உமாவோட அரசுவேலை கனவும் கலைஞ்சதோட அவங்க உயிரும் போயிருச்சு.