சிவகங்கை, பெரிகோட்டை... முட்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்த இளைஞர். சடலத்தை கண்டு போலீசாருக்கு தகவல் அளித்த மக்கள். விசாரணையில் சொந்த அண்ணனே தம்பியை வெட்டிக் கொலை செய்தது அம்பலம். அண்ணன் - தம்பிக்கிடையே கொலை செய்யும் அளவுக்கு அப்படி என்ன பிரச்னை? நடந்தது என்ன?சிவகங்கையில உள்ள பெரியகோட்டை பகுதிய சேந்த பிரகாஷ், எந்த ஒரு வேலைக்கும் போகாம வீட்டில சும்மா தான் இருந்துருக்காரு. இவருக்கு ஒரு அண்ணன் மற்றும் லோகேஷ்-ங்குற தம்பி இருக்கான். லோகேஷ் விறகு வெட்டுற வேலைய பாத்துட்டு இருந்துருக்காரு. அண்ணன் பிரகாஷ் டிகிரி வர படிச்சுருக்காரு.ஆனா அவருக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்கலன்னு கூறப்படுது. லோகேஷ் வீட்ல உள்ள யார்கிட்டயும் பேசவே மாட்டாராம். வேலைக்கு போய்ட்டு வீட்டுக்கு வர்ற லோகேஷ், திடீர்ன்னு கோபப்பட்டு வீட்ல உள்ளவங்க கூட சண்டை போடுறது, வீட்ல உள்ள பொருட்களை உடைக்கிறதுன்னு பிரச்னை பண்ணிட்டு இருந்துருக்காரு. இதபாத்த அண்ணன் பிரகாஷ், திடீர் திடீர்ன்னு உனக்கு என்ன ஆகுது, எதுக்கு பொருட்கள்ல எல்லாத்தையும் உடைக்கிற, அதெல்லாம் காசு கொடுத்து வாங்குனது, மறுபடியும் அந்த பொருட்கள வாங்க எவ்ளோ கஷ்டம்ன்னு தெரியுமான்னு கேட்ருக்காரு.அதுக்கு லோகேஷ் எந்த ஒரு பதிலும் சொல்லல. அப்பப்ப திடீர்ன்னு சைக்கோவா மாறுற லோகேஷ் தன்னோட தாய் கிட்டையும் சண்டை போட ஆரம்பிச்சுருக்காரு. லோகேஷ்-க்கு உடம்புல ஏதோ ஒரு பிரச்னை இருக்கு, அதனால தான் அவன் இப்படி பண்றான்னு நினைச்ச தாய், அவன ஹாஸ்பிட்டலுக்கு கூப்டு போய் அட்மிட் பண்ண பிரகாஷ் கிட்ட சொல்லிருக்காங்க.இதகேட்டு கோபமான லோகேஷ் நான் என்ன பையித்தியக்காரனா, எதுக்கு என்ன ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ண சொல்றிங்கன்னு கேட்டு தாய போட்டு அடிச்சுருக்காரு. அப்ப அங்கருந்த அண்ணன் பிரகாஷ் பதிலுக்கு லோகேஷ தாக்க வீட்டுக்குள்ள களேபரமே வெடிச்சுருக்கு. லோகேஷ்ஷால வீட்ல நிம்மதியே இல்லாம இருந்த பிரகாஷ், அவர கொலை பண்ணவும் திட்டம் போட்ருக்காரு.சம்பவத்தன்னைக்கு, லோகேஷ கூப்டு மருத்துவமனைக்கு போய்ருக்காரு பிரகாஷ். அப்ப லோகேஷ் பாதி வழியிலையே தப்பிச்சு போக பாத்துருக்காரு. அதனால கடுப்பான பிரகாஷ் அவர பிடிச்சு தாக்கிருக்காரு. அடுத்து மறைச்சு வச்சுருந்த அரிவாள எடுத்த பிரகாஷ், லோகேஷ சரமாரியா வெட்டிருக்காரு. லோகேஷ் சம்பவ இடத்துலையே உயிரிழந்துட்டாரு.அதுக்கப்புறம் வீட்டுக்கு போன பிரகாஷ், தம்பி எங்கையோ ஓடிப்போய்ட்டதா சொல்லி ஒன்னும் தெரியாத மாதிரி வீட்ல இருந்துருக்காரு. ஆனா, மறுநாள் நைட்டு லோகேஷோட சடலத்த பாத்த பொதுமக்கள் போலீஸ்க்கு ஃபோன் பண்ணி தகவல சொல்லிட்டாங்க.அதுக்கடுத்து விசாரணையோடய முடிவுல, எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ், பிரகாஷ்ஷை அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.