சென்னை வேளச்சேரி வீராங்காள் ஓடையில் தவறி விழுந்த கன்றுக்குட்டியை தீயணைப்புத்துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர். கன்றுக்குட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரரின் காலணி 2 அடிக்கு சேற்றில் சிக்கிக் கொண்டதால் அவரும் பரிதவிப்பிற்கு ஆளானார்.