ராணிப்பேட்டை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர். காரை பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் வந்து கொண்டிருந்த கர்நாடக பதிவெண் கொண்ட இன்னோவா கார், வலப்புறத்தில் ஏறி வந்ததால் எதிரில் வந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதிவிட்டு, பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதி நின்றதாக கூறப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் வந்தவர்களில் தினேஷ் என்பவர் பாலத்திற்கு கீழ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயும், சாஜன் மற்றும் பாலமுருகன் ஆகியோர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். காரில் இருந்த ஏர்பலூன் உடனடியாக திறந்து கொண்டதால் அதில் இருந்தவர்கள் உயிர் தப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.