திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், விபத்து ஏற்படுத்திய காரை போலீசார் தேடி வருகின்றனர். திருமாஞ்சோலை பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி மற்றும் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த ராமன் ஆகிய இருவரும் நாட்றம்பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது நெக்குந்தி பகுதியில் உள்ள தேசிய நெஞ்சாலையில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் அதிவேகமாக மோதிவிட்டு சென்றது. இதில் பைக்கில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், ராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சின்னத்தம்பி வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.