மதுரை மாவட்டம் பரவை அருகே பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையிலிருந்து மதுரை நோக்கி சென்ற காரின் முன்பகுதியில் தீப்பற்றி எரிந்த நிலையில், உடனே சுதாரித்து கொண்ட பெண், காரை நிறுத்தி விட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.