வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே சாலையோர பள்ளத்தில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கர்நாடக மாநிலத்தில் இருந்து 25 டன் எடையிலான அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பத்தலபள்ளி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியில் திடீரென பிரேக் பழுதானதாக கூறப்படுகிறது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், ஓட்டுநர் தப்பிய நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டு நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.