தொடர் விடுமுறை காரணமாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் அலையாத்தி காடுகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. காடுகளின் நடுவில் படகு சவாரி செய்வதற்காக நீண்ட நேரம் காத்திருந்து பதிவு செய்த மக்கள் அலையாத்திக் காடுகளின் அழகை கண்டு ரசித்தனர். உயர் கோபுரத்தில் இருந்து தொலைநோக்கி மூலம் பிச்சாவரத்தின் இயற்கை அழகை கண்டு ரசித்து பலரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர் .