சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் ரெடியாலாஜி பிரிவின் கீழ் புதிய சிடி ஸ்கேனர் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜிஇ ரெவலுஷன் அபெக்ஸ் இலிட் 512 ஸ்லைஸ் எனும் இந்த சிடி ஸ்கேனர் துல்லியமான நோயறிதல் மற்றும் குறைந்த கதிரியக்க படம் பிடித்தல் செய்யக்கூடியது. இந்த சிடி ஸ்கேனர் கதிரியக்க பணியாளர்களுக்கு கதிர்வீச்சை குறைத்து, படத்தின் தரத்தை உயர்த்தி மருத்துவர்களுக்கு சிறந்த தகவல்களை அளிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சவாலான கதிரியக்க பதிவுகளை ஆராய்ந்து கணிப்பதில் உள்ள சிரமங்கள் இனி இருக்காது என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தனர்.குறிப்பாக இசிஜி மற்றும் மருந்துகள் இன்றி ஒரே மூச்சில் செய்யக்கூடிய இதய பரிசோதனை, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பட மறுவடிவமைப்பு தொழில்நுட்பம், ஐந்து நிமிடங்களுக்குள் விரைவாக பதிவு செய்யக்கூடிய வசதி, துல்லியமான ஊசி செலுத்துவதற்காக நிழல் அடிப்படையில் பதிவு செய்தல் உள்ளிட்டவற்றை இந்த சிடி ஸ்கேனர் சிறப்பம்சமாக கொண்டுள்ளது. Related Link மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி