திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே நிலத்தகராறு காரணமாக சகோதரர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், அண்ணன், தம்பி மற்றும் தம்பி மனைவி ஆகியோர் படுகாயமடைந்தனர். மண்டலவாடி கொல்லக் கொட்டாய் பகுதியை சேர்ந்த சீனு என்பவர் தனது 4 ஏக்கர் நிலத்தை, மகன்கள் ராஜேந்திரன் மற்றும் குமாருக்கு சரிசமமாக பிரித்துக் கொடுத்த நிலையில், அதில் 10 அடி நிலத்துக்காக தகராறு ஏற்பட்டதில் அண்ணன் ராஜேந்திரன், தம்பி குமாரையும், அவரது மனைவி ஆனந்தியையும் கத்தியால் வெட்டினார். பதிலுக்கு தம்பி குமாரும் அண்ணன் ராஜேந்திரனை இரும்பு ராடால் தாக்கினார்.