கிருஷ்ணகிரி... ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சடலமாக கிடந்த முதியவர். செல்போன் சிக்னலை வைத்து கொலையாளிகள் மூன்று பேரை கைது செய்த போலீஸ். மூவரிடமும் துருவி துருவி விசாரணை செய்த போலீஸ். விசாரணையில் வெளியான பல அதிர்ச்சி தகவல். முதியவரை கொலை செய்தது மட்டுமில்லாமல் மேலும், ஒரு கொலை வழக்கிலும் சம்மந்தப்பட்டது அம்பலம். முதியவரும், 9 மாதங்களுக்கு முன்பு மூதாட்டியும் கொலை செய்யப்பட்டது ஏன்? நடந்தது என்ன?மார்ச் 19ம் தேதி. வீட்ல இருந்த எல்லாரும் விவசாய பணிக்கு போய்ட்டாங்க. மூதாட்டி நாகம்மாள் மட்டும் வீட்ல தனியா இருந்தாங்க. அப்ப திடீர்ன்னு மூதாட்டி நாகம்மாளோட வீட்ல இருந்து கரும்புகை வெளியேறிருக்கு. இதபாத்து, அதிர்ச்சியடைஞ்ச சிலர், அந்த வீட்டுக்கு ஓடிப்போய் பாத்துருக்காங்க. கரும்புகை சூழ்ந்திருந்ததால வீட்டுக்குள்ள போக முடியல.இதனால, கிராம மக்கள் சூளகிரி போலீசுக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் கொடுத்துருக்காங்க. உடனே ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் அந்த வீட்டுக்குள்ள போய் பாத்துருக்காங்க. அப்ப மூதாட்டி கழுத்தறுக்கப்பட்ட நிலையில சடலமா கிடந்தாங்க. அது மட்டும் இல்லாம, மூதாட்டி மூக்குல அணிஞ்சுருந்த மூக்குத்தி, கையில அணிஞ்சுருந்த மோதிரத்தையும் காணல. இத நோட் பண்ண கிராம மக்கள், நகைகள் காணும்-ங்குற விஷயத்த போலீஸ் கிட்ட சொல்லிருக்காங்க. இதனால இது நகைக்காக நடந்த கொலைன்னு சந்தேகப்பட்ட போலீஸ், கொலையாளி யாருன்னு விசாரிக்க ஆரம்பிச்சாங்க.அந்த ஏரியாவுல உள்ள மொத்த சிசிடிவி காட்சிகளையும் எடுத்து ஆய்வு பண்ணிருக்காங்க போலீஸ். அடுத்து மூதாட்டியோட செல்போன் நம்பருக்கு வந்த லாஸ்ட் கால், அடிக்கடி வந்த ஃபோன் கால்ன்னு எல்லாத்தையும் எடுத்து பாத்துருக்காங்க போலீஸ். ஆனா அதுல எந்த ஒரு துப்பும் கிடைக்கல. இதனால கொலையாளிய கண்டுபிடிக்க முடியாம போலீஸ் திணறிட்டு இருந்துருக்காங்க. அதுக்கப்புறம் நாகம்மாள் வசிச்சுட்டு இருந்த கிராம மக்கள் கிட்டயும், சுற்றுவட்டார கிராம மக்கள் கிட்டயும் தனித்தனியா போலீஸ் விசாரிச்சுருக்காங்க.அப்ப அதே கிராமத்த சேந்த முனியம்மாள் அணிஞ்சுருந்த சேலையில ரத்தக்கறை இருந்துருக்கு. இதனால முனியம்மாள கிட்ட விசாரணை பண்ணிருக்காங்க போலீஸ். அதுல முனியம்மாள் தனக்கு மாதவிடாய் ஏற்பட்டதால ரத்தக்கறையா இருக்குன்னு சொல்லிருக்காங்க. இதனால அவங்கள வீட்டுக்கு அனுப்பிவச்ச போலீஸ், உண்மை கொலையாளிகள கண்டுபிடிக்க முடியாம திணற ஆரம்பிச்சாங்க. அடுத்து இந்த வழக்குல எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால இந்த வழக்க போலீஸ் அப்படியே கிடப்புல போட்டுட்டாங்க.கடந்த 16ம் தேதி. தேன்கனிக்கோட்டை அடுத்த திம்மசந்திரம் பகுதியில முதியவர் ஒருத்தரு தலையில் ரத்த காயங்களோட உயிரிழந்து கிடக்கிறதா தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைச்சது. இதனால சம்பவ இடத்துக்கு போன போலீஸ் சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சுட்டு விசாரணையில இறங்குனாங்க. அதுல உயிரிழந்தது மாகடி கிராமத்தை சேந்த முனியப்பான்னு தெரியவந்துருக்கு. அதுக்கப்புறம் முனியப்பா எப்படி உயிரிழந்தாருன்னு தெரிஞ்சுக்க போலீஸ் விசாரணையில இறங்குனாங்க.முதல்ல முனியப்பாவோட செல்போன் நம்பர கைப்பற்றுன போலீஸ், சம்பவ நேரத்துல வேற நபர்களுடைய செல்போன் சிக்னல் எதுவும் பதிவாகிருக்கான்னு பாத்துருக்காங்க. அதுல சாரண்டபள்ளிய சேந்த நாகராஜ், உத்தனப்பள்ளி பெட்ரோல் பங்க் எதிர்ல வசிச்சுட்டு இருக்குற சின்னராஜ், தேன்கனிக்கோட்டை பிதிரெட்டி கிராமத்த சேந்த சக்திவேல் ஆகியோரது செல்போன் எண்கள காட்டிருக்கு. அதுமூலமா அவங்கள பிடிச்ச போலீஸ் மூணு பேர் கிட்டயும் விசாரணை பண்ணாங்க. அதுல தான் பல பகீர் தகவல்கள் வெளியாகிருக்கு.கிருஷ்ணகிரியில உள்ள தேன்கனிக்கோட்டை மாகடி கிராமத்த சேந்த 60 வயசான முனியப்பா, ஆடுகள வளர்த்துட்டு இருந்துருக்காரு. 15ம் தேதி அன்னைக்கு ஆடுகள விற்பனை செஞ்சுட்டு தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்டுக்கு வந்துருக்காரு. அப்ப அங்க முனியப்பாவோட உறவுக்காரங்களான நாகராஜ், சின்னராஜ், சக்திவேல்ன்னு மூணு பேரு இருந்துருக்காங்க.அதுக்கடுத்து அந்த 4 பேரும் சேந்து தேன்கனிக்கோட்டை திம்மசந்திரம் சாலையில உள்ள டாஸ்மாக் கடைக்கு போய்ருக்காங்க. முனியப்பா ஆடு வித்த பணத்த வச்சு எல்லாருக்கும் மது வாங்கி கொடுத்துருக்காரு. அதுக்கப்புறம் எல்லாரும் ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில உட்காந்து குடிச்சுருக்காங்க.அப்ப அந்த மூணு பேரும் முனியப்பா கிட்ட புது துணிகள் வாங்கி கொடுங்கன்னு கேட்ருக்காங்க. அதுக்கு ஓகே சொன்ன முனியப்பா மூணு பேரையும் கூப்டு போய்ட்டு அவங்களுக்கு புது துணி வாங்கி கொடுத்துட்டு மறுபடியும் வந்து மதுக் குடிச்சுருக்காங்க.அப்ப மதுபோதையில இருந்த முனியப்பா, இன்னைக்கு நிறைய செலவு பண்ணிட்டேன், என்கிட்ட இப்போதைக்கு 17 ஆயிரத்து 500 ரூபாய் தான் இருக்குன்னு பணத்த எடுத்து காட்டிருக்காரு. அதை பார்த்த மூணு பேரும் பணத்த எடுக்க முயற்சி பண்ணிருக்காங்க. அதுக்கு முனியப்பா அவங்க கிட்ட கடிஞ்சுக்கிட்டாரு. நீங்க கேட்டிங்கன்னு சரக்கு, ட்ரஸ்ன்னு எல்லாத்தையும் வாங்கி கொடுத்தேன், இந்த 17 ஆயிரத்து 500 ரூபாய், என் குடும்பத்துக்கு தேவை படுது, அதனால அந்த பணத்தை எடுக்காதிங்கன்னு திட்டிருக்காரு.இதனால ஆத்திரமடைஞ்ச அந்த மூணு பேரும் முனியப்பாவ தகாத வார்த்தையால திட்டி, அங்க கிடந்த கற்கள எடுத்து முனியப்பாவ சரமாரியா அடிச்சுருக்காங்க. இதுல நிலை குலைஞ்ச முனியப்பா சம்பவ இடத்துலையே சுருண்டு விழுந்து உயிரிழந்துட்டாரு. அதுக்கப்புறம் மூணு பேரும் அங்கருந்து தப்பிச்சு போய்ட்டாங்க. செல்போன் சிக்னல வச்சு மூணு பேரையும் பிடிச்ச போலீஸ் அவங்க மேல வேற ஏதும் கேஸ் இருக்கான்னு பாத்துருக்காங்க. அப்ப நாகராஜ் மீதும், சக்திவேல் மீதும் எந்த வழக்கும் இல்லை. ஆனா சின்னராஜ மட்டும் சூளகிரி போலீசார் ஒரு கொலை வழக்கிற்காக விசாரணைக்கு அழைச்சு அவரு கிட்ட கையெழுத்து வாங்கி அனுப்பி வச்சுருக்காங்க.அதுக்கப்புறம் முனியப்பா கொலை சம்பவம் பத்தி சூளகிரி போலீஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கு. சூளகிரி போலீசார் சின்னராஜ கஸ்டடியில எடுத்து விசாரிக்க, அதுல மேலும் பல தகவல்கள் வெளியாகிருக்கு.சின்னராஜ் உத்தனப்பள்ளி பெட்ரோல் பங்க் இருக்குற சாலையோரத்துல கொட்டகை அமைச்சு, பிளாஸ்டிக் பொருட்கள சேகரிச்சு, சம்பாதிச்சுட்டு இருந்தாரு. சில மாசங்களுக்கு முன்னாடி, இவரும் இவரோட தாய் முனியம்மாவும், அட்டகுறுக்கி பகுதியில பிளாஸ்டிக் பொருட்கள சேகரிச்சுட்டு இருந்தாங்க. அப்ப மூதாட்டி நாகம்மாள் மட்டும் வீட்ல தனியா இருந்தத பாத்துருக்காங்க. மூதாட்டி மூக்குல மூக்குத்தி, கையில மோதிரத்தையும் அணிஞ்சுருந்தத பாத்த ரெண்டு பேரும் அந்த நகைகள திருட திட்டம் போட்ருக்காங்க. அதுபடி அந்த ரெண்டு பேரும் மூதாட்டி வீட்டுக்குள்ள நுழைஞ்சுருக்காங்க. அப்ப மூதாட்டி யார் நீங்க, என்ன வேணும், எதுக்கு வீட்டுக்குள்ள நுழைஞ்சிங்கன்னு கேட்ருக்காங்க. அதுக்கு எந்த ஒரு பதிலும் சொல்லாத அந்த நபர்கள் மூதாட்டிய சரமாரியா அடிச்சுருக்காங்க.மூதாட்டி கத்தாம இருக்குறதுக்கு அவங்க வாய பொத்திருக்காங்க. அடுத்து அங்கருந்த கத்திய எடுத்த சின்னராஜ், மூதாட்டி நாகம்மாளோட கழுத்த அறுத்து கொன்னுருக்கான். அதுக்கப்புறம் மூதாட்டியோட மூக்குத்தி, மோதிரத்தை கழட்டி எடுத்துக்கிட்ட சின்னராஜ், வீட்ல இருந்த துணிகள், காலி பைகள தீ வச்சு கொளுத்திட்டு தனது அம்மாவோட அங்கருந்த தப்பிச்சு போய்ட்டான்.முதியவர் முனியப்பாவோட கொலை வழக்க வச்சு 9 மாசங்களுக்கு முன்னாடி நடந்த நாகம்மாளோட கொலை வழக்கு குற்றவாளிய கண்டுபிடிச்ச போலீஸ், முனியம்மா, சின்னராஜ், நாகராஜ், சக்திவேல் ஆகிய 4 பேரையும் அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க...