ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தில் குடும்பத் தகராறில் பெற்ற குழந்தைகள் மீது தீ வைத்து தந்தை கொளுத்தியதில் சிறுவன் படுகாயமடைந்தார். திருமலை செல்வன் - சுகன்யா என்ற தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், கணவர் மதுபோதையில் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனைவி தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக சென்ற திருமலை செல்வன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை மனைவி மற்றும் 2 குழந்தைகள் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் மனைவி, மகள் தப்பித்தனர். மகன் படுகாயம் அடைந்தார். தப்பி ஓடிய திருமலை செல்வனை போலீசார் கைது செய்தனர்