எருது விடும் திருவிழா : திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பெரியகசிநாயக்கன்பட்டி கிராமத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு பாரம்பரியத்தை போற்றும் விதமாக 43-ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில், ஊர் பொதுமக்கள், கிராம மூத்தோர் மற்றும் இளைஞர்கள் முன்னிலையில் எருது விடும் போட்டி சிறப்பாக நடைபெற்றது. இந்த எருது விடும் திருவிழாவில் பங்கேற்ற காளைகள் அனைத்தும் உரிய பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ், கால்நடை மருத்துவர்களால் முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே போட்டியில் அனுமதிக்கப்பட்டன. இதில் திருப்பத்தூர் மாவட்டம் மட்டுமின்றி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மேலும் அண்டை மாநிலமான ஆந்திரா மாநிலத்தின் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் 200க்கும் மேற்பட்ட சிறந்த இனக் காளைகள் இந்த விழாவில் பங்கேற்றன. மொத்தமாக 300க்கும் மேற்பட்ட காளைகள் களமிறங்கியது திருவிழாவில் சுமார் 3000க்கும் மேற்பட்ட காளையர்கள் உட்பட பொதுமக்களும் பங்கேற்றனர். இந்த எருது விடும் திருவிழாவில் வெற்றி பெற்ற காளைகளுக்கு மொத்தம் 81 பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக ரூபாய் 77,777 வழங்கப்பட்டது. திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சௌமியா தலைமையில் சுமார் 150க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்..இதையும் படியுங்கள் : தொடர்ந்து முரம்பு மண் கொள்ளை என குற்றச்சாட்டு