ஒட்டன்சத்திரம் அருகே இரண்டரை வயது பெண் குழந்தையை கடத்திச் சென்ற கும்பலில் 5 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவான ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனியில் மஞ்சுளா என்பவர், கணவரை பிரிந்து இரண்டரை வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். அவரது அண்ணன் விக்னேஷுடன் தகாத உறவில் இருந்த திவ்யா என்பவர் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறியதால், அவரது கணவர் போலீசில் புகாரளித்தார். போலீசார் அழைத்து விசாரித்த போது கணவர் மற்றும் தந்தையுடன் செல்ல மறுத்த திவ்யா, தோழி மஞ்சுளாவின் வீட்டில் தங்கியிருந்தார். அவர் மீண்டும் விக்னேஷுடன் செல்லவே, அவருக்கு அடைக்கலம் கொடுத்த மஞ்சுளாவின் குழந்தையை திவ்யாவின் கணவர் மற்றும் தந்தை தரப்பு கடத்திச் சென்றது.