கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், ஜி.பி.ஒய் என்ற செயலி மூலம் பொதுமக்களை ஏமாற்றி ஆன்லைன் மூலம் பணம் பறித்ததாக எட்டு பேரை போலீஸார் கைது செய்தனர். ஜி.பி. ஒய் மொபைல் செயலி மூலமாக 600 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தால் நாள்தோறும் அதிக லாபம் பெறலாம் என ஆசைவார்த்தை கூறி, பல பேரிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்ததாக கூறப்படுகிறது.