பேருந்து விபத்து : திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த சந்தைமேடு அருகே திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலையிலிருந்து சென்னை நோக்கி கர்நாடகா சென்ற டாட்டா ஏசி வாகனம் மீது எதிரே சென்னையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பேருந்து முன் பகுதி டயர் வெட்டித்ததில் கட்டுபாடு இழந்து டாட்டா ஏசி வாகனம் மீது மோதியதில் டாட்டா ஏசி டிரைவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து வந்த கீழ்பென்னாத்தூர் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உயிரிழந்த டாட்டா ஏசி டிரைவர் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Related Link மேம்பாலத்தில் இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து