திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏழு ரோடு சந்திப்பில் இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் அதில் வந்த பெண் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இதனை பயன்படுத்தி கொண்ட மர்மநபர் பெண்ணின் கைப்பை மற்றும் செல்போனை திருடி சென்ற சம்பவம் அரங்கேறியது. கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து பழம்புத்தூர் கிராமத்திற்கு சென்ற அரசு பேருந்து ஏழு ரோடு சந்திப்புக்கு வந்தபோது, வலதுபுறம் இரு சக்கர வாகனத்தில் வந்த பெண், பேருந்து வருவதை கவனிக்காமல் வருவதை கவனித்த ஓட்டுநர், அவர் மீது நேருக்கு நேர் மோதாமல் இருக்க சாலை தடுப்பில் மோதி பேருந்தை நிறுத்தினார். ஓட்டுநரின் சாதுர்த்தியத்தால் பெண்ணின் உயிர் தப்பியது.