நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே வேகமாக வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து, எதிரில் வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஒதுங்கியபோது, சாலையோரம் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, முருகானந்தபுரம் பகுதியில் விபத்தில் சிக்கியது. காயமடைந்த பேருந்து பயணிகள் மீட்கப்பட்டு கூடங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.