சென்னை தாம்பரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் சாலையை கவனிக்காமல் கடக்க முயன்ற போது அரசு பேருந்து மோதி தூக்கி வீசப்பட்ட நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தாம்பரம் ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த முருகன் நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டது. காயமடைந்த 3 பேரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது முருகன் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் சுரேந்தர் மற்றும் சஞ்சய் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.