புதுச்சேரி அருகே சேதராப்பட்டு பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி பண மோசடி செய்ததாக, கணவன் - மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். புருசோத்தம்மன் - கீதா என்ற அந்த தம்பதி, சேதராப்பட்டு, நாராயணபுரம், கடப்பேரிக்குப்பம் பகுதிகளை சேர்ந்தவர்களிடம் ஆயிரம் ரூபாய், இரண்டாயிரம் ரூபாய் என மாதச்சீட்டு நடத்தி பண மோசடியில் ஈடுபட்டனர்.