சாலையோரம் உள்ள மரத்திற்கு கீழ் படுத்திருந்த கூலித்தொழிலாளி. உடன் சுற்றிய நண்பரே பெரிய கல்லைத் தூக்கிப்போட்டு கூலித்தொழிலாளியை கொலை செய்த கொடூரம். கொலையாளியை மரத்தில் கட்டி வைத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள். கூலித்தொழிலாளியை உடன் சுற்றிய நண்பரே கொலை செய்தது ஏன்? கொலைக்கான காரணம் என்ன?ஒன்றாக சுற்றிய வெங்கடேசன்-காமராஜ்விழுப்புரம், அரகண்டநல்லூர் பக்கத்துல உள்ள சித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைக்காரி. இவங்களோட பேரன்தான் வெங்கடேசன். அம்மா, அப்பா இல்லாத பேரனை பிச்சைக்காரிதான் வளத்து ஆளாக்கிருக்காங்க. பேரன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் அப்டிங்குறதால தனியா வெளிய அனுப்பமாட்டாங்க பாட்டி. அக்கம்பக்கத்து வீடுகள், தெருவுல உள்ள சொந்தக்காரங்க வீடுகளுக்கு போற வெங்கடேசன் சில நண்பர்கள்கிட்டயும் பழகிருக்காரு. அப்படிதான், அதே கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி காமராஜ்கிட்ட பேசிருக்காரு வெங்கடேசன். சற்று மனநலம் பாதிக்கப்பட்டவரா இருந்தாலும் அதபத்தி பெருசா யோசிக்காத காமராஜ், வெங்கடேசன்கூட சேர்ந்து அடிக்கடி மது அருந்திட்டு இருந்துருக்காரு. அதுலயும் குறிப்பா கடந்த நாலு நாளா வெங்கடேசனும், காமராஜூம் மது குடிச்சிட்டு ஒண்ணாவே சுத்திட்டு இருந்துருக்காங்க. காமராஜை பலமுறை எழுப்பி பார்த்த வெங்கடேசன்சம்பவத்தன்னைக்கு சாயந்தரமும் ரெண்டுபேரும் சேர்ந்து மது குடிச்சிட்டு ஒண்ணா சுத்திருக்காங்க. அடுத்து, சாயந்தரநேரம் ஆனதும் ரெண்டுபேரும் வீட்டுக்கு நடந்து போயிட்டு இருந்துருக்காங்க. அப்போ, தலைக்கேறுன போதையில நடக்க முடியாம நடந்த காமராஜ் ஒருகட்டத்துல தள்ளாடி சாலையோரம் இருந்த மரத்து பக்கத்துல படுத்து தூங்கிட்டாரு. அரைபோதையில இருந்த வெங்கடேசன், காமராஜை எழுப்பி எழுப்பி பாத்துருக்காரு. ஆனா, காமராஜ் எழும்பவே இல்ல.தலையில் கல்லை தூக்கிப்போட்டு எழுப்பிய வெங்கடேசன்அடுத்து, என்ன செய்றதுனு தெரியாத வெங்கடேசன், சாலையோரம் கிடந்த ஒரு பெரிய கல்லைத் தூக்கி காமராஜ் தலையில போட்டு எழுப்பிருக்காரு. ஆனா, தலை நசுங்கி சம்பவ இடத்துலயே உயிரிழந்துட்டாரு காமராஜ். அதபாத்து பதறுன பொதுமக்கள் வெங்கடேசனை புடிச்சி மரத்துல கட்டி வச்சிட்டு போலீசுக்கு தகவல் குடுத்துருக்காங்க. அடுத்து, நடத்துன விசாரணையில வெங்கடேசன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்னு தெரியவந்துருக்குது. அதனால அவர்மேல என்ன நடவடிக்கை எடுக்குறதுங்குறது போலீசாருக்கே குழப்பம்தான். Related Link காதலித்த மகள், வில்லனாக மாறிய தந்தை