விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சலவாதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் தாய் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த லோகநாதன் என்பவர் தனது தாய் அமுதாவுடன் சென்னையில் இருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். சலவாதி அருகே சந்திப்பில் திரும்ப முயன்ற போது, ஊட்டியில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனம் லாரிக்கு அடியில் சிக்கிய நிலையில், சுமார் அரை கிலோ மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்டு அமுதா உயிர் இழந்தார். தகவலறிந்து வந்த ரோஷணை போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.