தூத்துக்குடி குரூஸ்புரம் ஓடை கரையிலிருந்து கழிவு மண்ணை ஏற்றி வந்த லாரி பாதாள சாக்கடை பள்ளத்தில் இறங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பூபாலராயர்புரத்திலிருந்து கழிவு மண்ணை ஏற்றிக்கொண்டு தாளமுத்து நகர் நோக்கி சென்ற லாரி சாலை நடுவே உள்ள பாதாள சாக்கடை மூடி மீது ஏறி இறங்கியபோது பெரும் பள்ளம் ஏற்பட்டு குழிக்குள் இறங்கியது. இதையடுத்து ஜேசிபி மூலம் லாரியை பள்ளத்திலிருந்து தூக்கும் பணி நடைபெற்றது.