வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலுக்கு செல்லாத நாகை மீனவர்கள் தங்களின் படகுகளை பாதுகாப்பாக கரையோரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே பகுதியில் நீடிப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அடுத்த 24 மணி நேரத்தில் அது மேற்கு, வட மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 55 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளதால் நாகையில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை..