கோவையில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். சின்னியம்பாளையம் டீச்சர் காலனி அருகே சந்தேகத்திற்கிடமான வாகனத்தை பிடித்து அஜித்குமார் என்பவரிடம் விசாரணை செய்தனர். அப்போது பல்வேறு பகுதிகளில் 14 இருசக்கர வாகனங்களை திருடியதை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர்.