தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மகளுடன் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்துக்காக புகைப்படம் எடுக்க சென்ற தந்தை, மினிபஸ் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முடச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அய்யாதுரை தனது மகள் கவுசல்யாவுடன், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த விண்ணப்பத்தில் புகைப்படம் கொடுப்பதற்காக பேராவூரணி சென்றார். நாட்டாணிக்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையம் அருகே வளைவில் திரும்பிய போது இருசக்கர வாகனம் மீது மினிபஸ் மோதியது.