மருத்துவ வசதி இல்லாத இடங்களுக்கு சென்று மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்க ஏதுவாக ஒவ்வொரு ஒன்றியத்திலும் நடமாடும் மருத்துவமனை சேவை பயன்பாட்டில் உள்ளது. இதன்மூலம் கிராமங்களில் வசிக்கும் மக்களை நாடி சென்று நாடி சென்று மருத்துவ சேவை மற்றும் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள கிராம மக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்க பயன்பாட்டில் உள்ள நடமாடும் மருத்துவமனை வாகனத்தில் ரூபின் சீட்டுகள் மற்றும் பக்கவாட்டில் இரும்பு கம்பிகள் கட்டிக்கொண்டு கதவுகள் திறந்த நிலையில் சரக்கு வாகனம் போல் இன்று காலை கனகம்மாசத்திரத்தில் இருந்து திருத்தணி நோக்கி சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளது. நடமாடும் மருத்துவ மனை வாகனத்தில் சரக்கு வாகனம் போல் பொருட்கள் ஏற்றி செல்வதை பார்த்துள்ள வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து தங்களின் மொபைலில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரியிடம் விசாரித்த போது அரும்பாக்கம் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை சுகாதார துறை குழுவினர் வருகை தந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும், இதனை முன்னிட்டு துணை சுகாதார நிலையம் வளாகத்தில் ரூபின் சீட்டுகள் பொருத்திய பந்தல் அமைக்க ஏதுவாக நடமாடும் மருத்துவமனை வாகனத்தை சுகாதார ஊழியர்கள் சீட்டுகள் மற்றும் இரும்பு கம்பிகள் எடுத்துச் சென்றதாக தெரிவித்தனர். கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை வழங்க பயன்படுத்தப்படும் நடமாடும் மருத்துவமனை சரக்கு வாகனமாக பயன்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Related Link மதுபோதையில் இருந்த தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர்