நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் பகுதியில் பெய்த மழையால், மண் சுவர் கொண்டு கட்டப்பட்ட ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. முத்தாரம்மன் கோவில் தெரு பகுதியில் வசித்து வரும் சண்முகசுந்தரம் - சுப்புலட்சுமி தம்பதியின் ஓட்டு வீட்டின் அருகே கடந்த மாதம் சாலை அமைக்கும் பணிக்காக குழி தோண்டணப்பட்டது. ஆனால் இது வரை எந்த பணியும் நடைபெறாத நிலையில், அந்த குழியில் மழை நீர் தேங்கி, மண்சுவர் ஈரத்தில் ஊறி வீடு இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.